Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்`வணங்கான்’ படம் இன்று ஒடிடியில் வெளியீடு

`வணங்கான்’ படம் இன்று ஒடிடியில் வெளியீடு

`பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வந்தது. சமீப காலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அருண் விஜய்க்கு இந்த படம் ஒரு மைல்கல். விக்ரம், சூர்யாவை போலவே அருண் விஜய்யிடம் இருந்தும் சிறப்பான ஒரு நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பாலா. வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக அபாரமாக நடித்திருக்கும் அருண் விஜய் பல இடங்களில் கலங்க வைத்திருக்கிறார். இவருடைய தங்கையாக நடித்திருக்கும் ரிதாவும், காதலியாக நடித்திருக்கும் நடிகை ரோஷினி பிரகாசும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளன.

கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனியும் நேர்மையான நீதிபதியாக மிஷ்கினும் நடித்துள்ளனர். இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் பிப்ரவரி 21 முதல் டென்கோட்டா என்ற ஸ்ட்ரீமிங் தளத்தில் திரையிடப்பட உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments