Wednesday, November 11, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மேகன் மார்க்கலின் தந்தை மீண்டும் சிறையில் அடைப்பு!

மேகன் மார்க்கலின் தந்தை மீண்டும் சிறையில் அடைப்பு!

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மாமனாரும், மேகன் மார்க்கலின் பிரிந்துவாழும் தந்தையுமான தோமஸ் மார்க்கல், நீதிமன்றம் விதித்த மின்னணுக் கண்காணிப்புக் கருவியை அகற்றியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

82 வயதான தோமஸ் மார்க்கல், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, வீட்டுக் காவலில் இருக்கவும், கணுக்காலில் மின்னணுக் கண்காணிப்புக் கருவியை அணியவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், திங்கட்கிழமை அதிகாலை அவர் அந்தக் கருவியை அகற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிணையின்றி அவரை மீண்டும் சிறையில் அடைக்குமாறு அமெரிக்க மத்திய நீதிமன்ற நீதிபதி லிண்ட்சே கிரிஃபின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவரது உடல்நிலை மற்றும் மனநிலை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தோமஸ் மார்க்கல் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments