Tuesday, November 3, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்"ஐபிஎல் ஏலத்தில் நான் பங்கேற்கப்போவதில்லை!

“ஐபிஎல் ஏலத்தில் நான் பங்கேற்கப்போவதில்லை!

பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர், வரவிருக்கும் ஐபிஎல் (IPL) ஏலத்தில் பதிவு செய்யும் எந்தவொரு எண்ணமும் தனக்கில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கிரிக்கெட் இணையதளத்திற்கு அவர் வழங்கிய செய்தியில், வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் தான் பதிவு செய்யப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல்லில் அனுமதி இல்லாத நிலையில், சமீபத்தில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற அமீர், இங்கிலாந்து நாட்டவராக ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இதேபோன்றுதான் கடந்த காலத்தில் அசார் மஹ்மூந்தும் பிரித்தானிய பாஸ்போர்ட் மூலம் ஐபிஎல்லில் விளையாடியிருந்தார்.

சமீபத்தில் அவர் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் வரைவுக்காக பிரித்தானிய நாட்டவராகப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தற்போதைய நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் திட்டம் இல்லை என அவர் வூககங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments