Tuesday, October 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்80 வயதில் 4ஆவது முறையாக ஜனாதிபதியான லூலா டா சில்வா !

80 வயதில் 4ஆவது முறையாக ஜனாதிபதியான லூலா டா சில்வா !

பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 4ஆவது முறையாகவும் ஜனாதிபதியாக தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கருத்துக் கணிப்புகளையும், முதலாவது கட்ட தேர்தல் முடிவுகளையும் தலைகீழாக மாற்றி, 80 வயதான லூலா டா சில்வா இந்த வெற்றியைப் பதிவுசெய்துள்ளார்.

கருத்துக் கணிப்புகளை  தலைகீழாக மாற்றி வெற்றி

1980களில் பிரேசிலில் ஜனநாயகம் திரும்பிய பிறகு, முதலாம் சுற்றில் பின்னடைவைச் சந்தித்து இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகும் முதல் தலைவராக லூலா மாறியுள்ளார்.

லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் தீவிர வலதுசாரி கட்சிகளின் வெற்றி அலை வீசி வந்த நிலையை மாற்றி, லூலாவின் இந்த வெற்றி அந்த பிராந்தியத்தில் ஒரு முக்கிய அரசியல் சமநிலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

மேலும், போல்சனாரோ குடும்பத்திற்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வெளியுறவுத்துறை பிரசாரம் செய்த போதிலும் லூலா வெற்றி பெற்றுள்ளார்.

எனினும் , லூலாவின் இந்த 4ஆவது ஆட்சிக்காலம் கடுமையான சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலதுசாரிக் கூட்டணிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால், சட்டங்களை நிறைவேற்றுவதிலும் ஆட்சி நிர்வாகத்திலும் அவர் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

அத்துடன், நாட்டின் அதிகரிக்கும் கடன் சுமை (மொ.தே. உ 82%க்கும் மேல்) மற்றும் 2.3% ஆக எதிர்பார்க்கப்படும் குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகியவையும் லூலாவின் புதிய ஆட்சிக்கு சவால்களாக உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments