Sunday, September 27, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் உயிரிழப்பு

கனடாவில் ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் உயிரிழப்பு

கனடாவின் மாண்ட்ரீல் நகரின் தெற்குப் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

செயிண்ட்-பிரிஜிட்-டிபெர்வில் நகராட்சியில் உள்ள 10-வது நெடுஞ்சாலைக்கு அருகே ராங் டெஸ் எகோசைஸ் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததையடுத்து, பிற்பகல் 2:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மாகாண காவல் துறையான சுரேட்டே டு கியூபெக் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக காவல் துறையின் சார்ஜென்ட் ஆட்ரி-அன்னே பிலோடோ உறுதிப்படுத்தினார்.

விரைந்து செயல்பட்ட மீட்புக் குழுவினர் ஒரு மணி நேரத்திற்குள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

எனினும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் யாருக்குச் சொந்தமானது, அது எங்கிருந்து புறப்பட்டது, எங்கு சென்று கொண்டிருந்தது மற்றும் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் ஆகியவற்றை காவல் துறையினரால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த விபத்துக்கான முழுமையான காரணங்களைக் கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விபத்து நடந்த இடத்திற்குத் தனது விசாரணைக் குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments