Monday, September 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சில காட்சிகள் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றிருந்த நிலையில், படக்குழு இன்று திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்குவதால், இப்படம் காதல் பின்னணியிலான கதையாக இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments