2026 விழிப்புணர்வுமிக்க உணவு முறைமைகள் தொடர்பான உலகளாவிய மாநாட்டில் பங்கேற்பதற்காக பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடு திரும்பியுள்ளார்.
ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின்போது, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், பிரதமர் தாஷோ ஷெரிங் தொப்கே மற்றும் கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் யீசாங் டே தபா ஆகியோரை பிரதமர் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.
இந்த விஜயத்தின்போது கல்வி, கலாசாரம், சுற்றுச்சூழல், நிலையான அபிவிருத்தி மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை – பூட்டான் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திம்புவில் உள்ள தாஷிச்சோ சோங் விகாரை, அரச ஆடை அருங்காட்சியகம், செம்தோகா சோங் கோட்டை மற்றும் பாரோவில் உள்ள பூட்டான் தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களையும் பிரதமர் பார்வையிட்டுள்ளார்.


