இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
விஜயத்தின்போது இலங்கைத் தலைவர்களுடன் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ள அவர், கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியப் புலம்பெயர் சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.
மேலும், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவுக்கும் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் குறிப்பாக கடல்சார், பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


