க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதிக்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
கடந்த மதாம் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை, 372,310 பரீட்சார்த்திகளுடன் செப்டம்பர் 5ஆம் திகதி நிறைவடைந்தது.
மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இந்த ஆண்டின் இறுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அmவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


