தமிழகம் சென்றிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் விசேடமாக தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் நலனுக்காக செய்த பல திட்டங்களையும், டித்வா புயல் சமயத்தில் இலங்கை மக்களுக்குத் தமிழக மக்கள் சார்பில் அனுப்பிய உதவிகளையும் இந்தச் சந்திப்பின்போது சுமந்திரன் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.


