Tuesday, June 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தமிழ்த் திரையுலகில் படமாகும் மலையகத்தின் கதை

தமிழ்த் திரையுலகில் படமாகும் மலையகத்தின் கதை

பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஐ நேற்று (08/06) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது மலையக மக்களின் வாழ்வியல், வரலாறு மற்றும் கலாசாரத்தை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தனது திட்டம் குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் பிரதி அமைச்சரிடம் விளக்கினார்.

இத்திரைப்படத்தில் மலையக கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டார்.

பிரதி அமைச்சர் இத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments