Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர்...

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

பாகிஸ்தான் விமானப்படையினர் இன்று அதிகாலை தொடக்கம் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா வசிக்கும் முக்கிய நகரமான கந்தகார், எல்லைப் பகுதி மாகாணம் பக்தியா ஆகிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தலிபான் அரசாங்கமும் பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சமூக ஊடகத்தில், தங்கள் பொறுமை எல்லையை மீறிவிட்டதாகவும் தற்போது தங்களுக்கும் உங்களுக்கும் இடையே நேரடிப் போர் ஆரம்பமாகிவிட்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இந்த இராணுவ நடவடிக்கைக்கு ‘ஒபரேஷன் கசாப் லில் ஹக்’ என்று பெயரிட்டுள்ளது.

முன்னதாக நேற்றிரவு தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைப் படைகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளன.

அதில் 55 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாகவும், பல இராணுவப் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை தனது நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்களே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்ததுடன் பதில் தாக்குதலையும் ஆரம்பித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments