Monday, March 16, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து 18 பேர் பலி!

மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து 18 பேர் பலி!

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த
பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகில் அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களது படகு
கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 18 பேர் பலியானார்கள். படகு மூழ்கி கிடப்பதை அந்த வழியாக சென்ற துருக்கி கப்பலில் இருந்தவர்கள் பார்த்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். பலியானவர்களின்
உடல்களை மீட்டனர். இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments