Wednesday, January 8, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்காரைநகர் படகு கட்டுமான தளத்தை புனரமைக்க இந்தியா உதவி!

காரைநகர் படகு கட்டுமான தளத்தை புனரமைக்க இந்தியா உதவி!

யாழ். மாவட்டத்தில் காரைநகர் படகு கட்டுமான தளத்தை புனரமைப்பதற்கு இந்தியா – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

காரைநகர் படகு கட்டுமானத் தளத்தை புனரமைப்பதற்கு இந்தியா 290 மில்லியன் ரூபாவை நிதியாக வழங்குகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ. சந்தோஷ் ஜா மற்றும் இந்தியாவிற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் எச்.இ.க்ஷேனுகா திரேனி செனவிரத்ன ஆகியயோர் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளனர்.

வரையறுக்கப்பட்ட சீனோர் நிறுவனத்திற்குரிய காரைநகர் படகு கட்டுமான நிலையத்தின் புனரமைப்பிற்காக நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்தல், தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களை பெறுகை செய்தல் போன்றவற்றுக்காக நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

படகு கட்டுமானத் தளம் புனரமைக்கப்பட்டதும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதார வாய்ப்புகளைப் பெருக்கவும் படகுத் தளத்தைச் சுற்றியுள்ள சிறிய நிறுவனங்கள் உட்பட அப்பகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மேலும் தரமான மீன்வளப் பொருட்களின் விநியோகத்தை மேம்படுத்தவும் உதவும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments