Wednesday, January 8, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்அஸ்வின் திடீர் ஓய்வு சர்ச்சை ரோகித், கம்பீரிடம் விசாரணை நடத்த பி.சி.சி.ஐ முடிவு

அஸ்வின் திடீர் ஓய்வு சர்ச்சை ரோகித், கம்பீரிடம் விசாரணை நடத்த பி.சி.சி.ஐ முடிவு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து தொடரின் முடிவை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை தொடங்குகிறது.

இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்க முடியும் என்ற சூழலில் இந்தியா விளையாட உள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே இந்த போட்டி இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக தொடரில் இடம்பெற்றிருந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 3-வது போட்டியின் முடிவில் ஓய்வு அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவரது ஓய்விற்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர்தான் காரணம் என்று சர்ச்சைகள் எழுந்தன. மேலும் டிராவிட்டு பின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற கம்பீரின் தலைமையில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இவரது தலைமையில் இந்தியா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் (0-3) தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தடுமாறி வருகிறது. இதனால் இவர் மீது பல தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மறுபுறம் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீதும் பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் தொடர்ச்சியாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவர் மீது பெரும் அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நடப்பு பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை முடிந்ததும் தொடர் தோல்விகள் மற்றும் அஸ்வினின் ஓய்வு குறித்து ரோகித் மற்றும் கம்பீரிடம் விசாரணை நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments