Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.?

கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.?

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படமாக ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, சிவதா , யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க சிம்பு உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்த கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்பு தற்போது வட சென்னை பின்னணியில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். அதை முடித்ததும் பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இவர் நடிப்பில் இன்னும் இரு படங்கள் உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments