Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் 20 இலட்சத்துக்கு அதிகமான பண மோசடி - ஒருவர் கைது!

யாழில் 20 இலட்சத்துக்கு அதிகமான பண மோசடி – ஒருவர் கைது!

தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை தருவதாகக் கூறி, வவுனியாவில் உள்ள நபர் ஒருவரை ஏமாற்றி பணத்தினை பெற்றுக்கொண்டு ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments