2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில், குழு டி பிரிவில் இன்று அதிகாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பராகுவே வீரர் டாமியன் போபாடில்லா (Damian BOBADILLA) அடித்த ‘ஓன் கோல்’ (Own goal) மூலம் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து 31-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் போலரின் பலோகன் (Folarin BALOGUN) கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.
தொடர்ந்து முதல் பாதி முடிவதற்கு முன்பாக மீண்டும் கோல் அடித்த பலோகன் அமெரிக்காவை 3-0 என்ற வலுவான முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
முதல் பாதி முடிவில் 3-0 என பின்தங்கியிருந்த பராகுவே, இரண்டாவது பாதியில் போராடியது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் மௌரிசியோ (MAURICIO) கோல் அடித்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார்.
2-ம் பாதி முடிவதற்கு முன்பாக ஜியோவானி ரெய்னா (Giovanni REYNA) கோல் அடித்து அடித்து அமெரிக்காவை 4-1 என்ற வலுவான முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இறுதியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் வெற்றியுடன் தொடங்கியது.
இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகளுடன் குரூப் டி பிரிவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.



