சில பகுதிகளில் 48 மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாவே குறித்த நீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (06) முற்பகல் 9 மணி முதல் எதிர்வரும் 08ஆம் திகதி முற்பகல் 9 மணி வரை உடுவாவல, ரஜபிஹில்ல மற்றும் கோனிகொட ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த காலப்பகுதிக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்வதுடன், நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத் தடையால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.


