22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானத்தை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் செப்டம்பர் 24ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் செப்டம்பர் 25ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு நிலையில் விவாதிக்கப்படவுள்ளது


