Thursday, September 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு

மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த, ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ (MV June Aster) என்ற பயணிகள் படகில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் இருந்து நேற்றைய தினம் புறப்பட்டு சென்ற, குறித்த ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ பயணிகள் படகு, கோரோன் என்ற பகுதி அருகே இவ்வாறு தீ விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, படகில் பயணித்த சுமார் 80-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி இருப்பதாகவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என மொத்தம் 134 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments