Wednesday, November 25, 2026
spot_img
Homeகனடா செய்திகள்155 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட மளிகைக் கடை மீண்டும் திறப்பு!

155 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட மளிகைக் கடை மீண்டும் திறப்பு!

கியூபெக் நகரில், 1871ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வட அமெரிக்காவின் மிகப் பழமையான மளிகைக் கடைகளில் ஒன்றான J.A. Moisan, கடந்த நவம்பர் 20ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடையை, பிரான்ஸிலிருந்து வந்த Isabelle மற்றும் Joseph Di Pilato தம்பதியினர் புதிய நிர்வாகத்தின் கீழ் மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

“J.A. Moisan à l’italienne” என்ற பெயரில் இயங்கும் இந்தக் கடையில், இத்தாலிய உணவுப் பொருட்கள், சிறப்பு மளிகைப் பொருட்கள் மற்றும் தயார்நிலை உணவுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும், வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதற்காக சுமார் 20 இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட இந்த வணிக நிலையத்தின் வரலாற்றையும் அடையாளத்தையும் பாதுகாத்து, புதிய இத்தாலிய உணவுக் கலாசாரத்துடன் மீண்டும் வாடிக்கையாளர்களை வரவேற்பதே புதிய உரிமையாளர்களின் நோக்கமாகும்.

இந்த மறுதொடக்கம் கியூபெக் நகரின் வரலாற்றுப் பாரம்பரியத்திற்கான முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments