இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
இந்து மதப்பண்டிகையான தீபாவளி இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை ( 8ம் திகதி – ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள், நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக அறையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டார்.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அனுமன் பாடல்கள் அடங்கிய புத்தகம் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பரிசாக வழங்கப்பட்டது.


