Saturday, November 7, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனேடிய பாதுகாப்பு உளவுத்துறைக்கு $6 பில்லியன் நிதி ஒதுக்கீடு!

கனேடிய பாதுகாப்பு உளவுத்துறைக்கு $6 பில்லியன் நிதி ஒதுக்கீடு!

கனேடிய உளவுத்துறை தகவல் சேகரிக்கும் திறனை மேம்படுத்துவதற்கும், வெளிநாட்டு உளவுத்துறைப் பங்காளிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் மத்திய அரசாங்கம் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.

சமீபத்திய வரவுசெலவுத் திட்டத்தின்படி, அடுத்த நிதியாண்டின் அடிப்படையில் அடுத்த 10 ஆண்டுகளில் கனடிய பாதுகாப்பு உளவுத்துறை சேவைக்கு (CSIS) மொத்தம் 6 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கனடிய பாதுகாப்பு உளவுத்துறை சேவைக்கு 579.5 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்த உளவுத்துறை நிறுவனத்திற்குச் செய்யப்படும் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

இறையாண்மை பேணுவதன் மூலம் நாட்டைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக லிபரல் கட்சியின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் வாழ்க்கை முறைக்கு எதிராக எழும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு எதிர்கொள்ளும் திறன், கனடாவிற்கு இருக்க வேண்டும் என்பதில் கனேடியர்கள் நம்பிக்கை கொள்ள முடியும்” என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments