Saturday, November 7, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கியூபெக்கில் வேலைநிறுத்தம்: மருத்துவப் பயிற்சிகள் பாதிப்பு!

கியூபெக்கில் வேலைநிறுத்தம்: மருத்துவப் பயிற்சிகள் பாதிப்பு!

கியூபெக் மாகாணத்தில் தொடரும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, துணைமருத்துவப் பிரிவில் பயிலும் மாணவர்களின் கட்டாயப் பயிற்சி மற்றும் பட்டப்படிப்புகள் தாமதமடைந்து வருகின்றன. இது மாகாணத்தின் எதிர்கால சுகாதார சேவைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தை அவசர ஊர்தி ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றனர். உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதிய உயர்வு, மேம்பட்ட ஓய்வூதிய சலுகைகள் மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கான சிறந்த பணிச்சூழல் ஆகியவற்றை வழங்குமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.

குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் தங்களது பணிகளின் பளுவும் சிக்கலும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கும் ஊழியர்கள், அதற்கு இணையான ஊதியத்தை வலியுறுத்துகின்றனர்.

புதிய பணியாளர்களைத் தாங்களே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகச் சி.எஸ்.என். (CSN) தொழிற்சங்கத்தின் அவசர ஊர்திப் பிரதிநிதியான மாத்தியூ லாகோம்ப் (Mathieu Lacombe) தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டங்கள் ஊழியர்களின் தற்போதைய பணிச்சுமையை நிவர்த்தி செய்வதற்கும், புதியவர்கள் துறையைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்குமே நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

எதிர்வரும் 12ஆம் திகதியன்று புதிய பேச்சுவார்த்தை ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும், புதிதாகப் பதவியேற்றுள்ள கியூபெக் அரசாங்கத்துடன் இன்னும் பேச்சுவார்த்தைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை என அந்தத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments