Friday, October 30, 2026
spot_img
Homeகனடா செய்திகள்விமானிகளின் அதிகபட்சப் பணிநேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்குமாறு கோரிக்கை

விமானிகளின் அதிகபட்சப் பணிநேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்குமாறு கோரிக்கை

கனடாவின் வடக்குப் பகுதிகளில் விமான சேவைகளை வழங்கும் குறைந்தது 18 நிறுவனங்கள் விமானிகளின் அதிகபட்சப் பணிநேரத்தை நாளொன்றுக்கு 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி கனடாவின் போக்குவரத்துத் துறையிடம் (Transport Canada) விண்ணப்பித்துள்ளன.

விமானப் பயணங்களின் போது ஏற்படும் தொடர்ச்சியான தாமதங்களைச் சமாளிப்பதற்காகவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தற்போதைய விதிகளின்படி, விமானி ஒருவரின் அதிகபட்ச தினசரிப் பணி நேரம் 13 மணி நேரமாகவும், வாராந்திர பணிக்காலம் 60 மணி நேரமாகவும் உள்ளது.

ஆனால், இந்த விதிமுறைகளை நீட்டிக்குமாறு கோரும் நிறுவனங்கள், இதன் மூலம் தினசரிப் பணி நேரத்தை 14 மணி நேரமாகவும், வாராந்திர பணிக்கால வரம்பை 70 மணி நேரமாகவும் உயர்த்தக் கோரியுள்ளன.

இதன் அடிப்படையில், விமானப் பணியாளர்கள் 28 நாட்களில் அனுமதிக்கப்பட்ட 192 மணி நேரத்திற்குப் பதிலாக, 210 மணி நேரம் வரை வேலை செய்ய வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.

கனடாவின் மிகவும் தொலைதூரப் பகுதிகளில் இயங்கும் இந்த நிறுவனங்கள், 2020ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள கடுமையான விதிமுறைகள் ஆனவை, வடக்கின் கணிக்க முடியாத வானிலை மற்றும் போதிய வசதியற்ற விமான நிலையச் சூழல்களுக்குப் பொருத்தமாக இல்லை வாதிடுகின்றன.

இதேவேளை, விமானப் பணியாளர்களின் முக்கியச் சங்கமான ‘அல்பா கனடா’ (ALPA Canada) இந்தத் கோரிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இது விமானிகளின் சோர்வு அளவை ஆபத்தான கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் என்றும், இலாப நோக்கிற்காக விமானச்சேவை நிறுவனங்கள் பாதுகாப்பு விதிகளுடன் விளையாடுவதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் டிம் பெர்ரி (Tim Perry) குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments