Thursday, October 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அஸ்வெசும கொடுப்பனவை இழந்துள்ள 13 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்

அஸ்வெசும கொடுப்பனவை இழந்துள்ள 13 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் புதிய நடைமுறைகளின் கீழ் 1,391,830 குடும்பங்கள் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்கான தகுதியை இழந்துள்ளன.

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள முதலாவது புதுப்பிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2025.12.15 ஆம் திகதி கொண்ட 2497/03 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் ‘ கடும் வறுமையில் பாதிக்கப்பட்டவர்கள்’ மற்றும் ‘வறுமையில் வாடும் குடும்பங்கள்’ ஆகிய இரு பிரிவுகளுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

2026 அக்டோபர் 27 ஆம் திகதி வரையில் 2,383,630 குடும்பங்கள் தகவல் புதுப்பித்தல் நடைமுறையை நிறைவு செய்திருந்ததாகவும், அவர்களுள் 991,800 குடும்பங்கள் ‘வறுமையில் வாடும் குடும்பங்கள்’ மற்றும் கடும் வறுமையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் நன்மைகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

தகுதி பெற்ற குடும்பங்களில் 363,142 குடும்பங்கள் கடும் வறுமையில் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக ரூ. 17,500 வழங்கப்படும். அதேவேளை, வறுமையில் வாடும் 628,658 குடும்பங்களுக்கு மாதம் ரூ. 10,000 வழங்கப்படும்.

பயனாளிகள் பட்டியல் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம நிலதாரி அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.wbb.gov.lk இலும் வெளியிடப்பட்டுள்ளன.

மேல்முறையீடுகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனைகளை 2026 அக்டோபர் 29 முதல் நவம்பர் 11 வரை eservices.wbb.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது சபையின் இணையத்தளத்திலும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அலுவலகங்களிலும் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களைப் பயன்படுத்தியோ சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் தமது அடையாளம் வெளிப்படுத்தாமலும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க முடியும்.

மேலும் 740,127 குடும்பங்கள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில், இரண்டாவது புதுப்பிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலை டிசம்பர் மாதத்தில் வெளியிட சபை எதிர்பார்த்துள்ளது.

முதலாவது பட்டியலில் புதிதாகத் தகுதி பெற்ற பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நவம்பர் 27 ஆம் திகதி அவர்களின் அஸ்வெசும வங்கிப் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதுடன், வங்கிப் கணக்குகளைத் ஆரம்பிப்பதற்கு அவசியமான கடிதங்கள் நவம்பர் 12 முதல் விநியோகிக்கப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments