விமானக் கடத்தல் முயற்சியைத் தடுத்த இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அவருக்கு இஸ்ரேல் அரசின் உயரிய வீரதீரச் செயல் விருது வழங்கப்படவுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார்.
ஃப்ளைடுபாய் விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் காப்பாற்றிய ஆறு பேருக்கு, டெல் அவிவ் நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய வீரதீரச் செயல் விருது விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் விரைவில் குணமடையத் தாம் வாழ்த்துவதாகவும், குணமடைந்து வீடு திரும்பியதும் அவருக்கான விருது வழங்கப்படும் என்றும் அதிபர் குறிப்பிட்டார்.


