Sunday, November 29, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஸ்பெயின் பொதுத் தேர்தல்: 3.87 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

ஸ்பெயின் பொதுத் தேர்தல்: 3.87 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

ஸ்பெயினில் பாராளுமன்றத்தின் கீழவையான 350 உறுப்பினர்களையும், மேலவையான செனட்டின் 209 உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான முன்கூட்டிய பொதுத் தேர்தல் இன்று (29) நடைபெறுகின்றது.

இந்த தேர்தலில் சுமார் 3.87 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்கும், ஆல்பர்டோ நூனெஸ் ஃபெய்ஜோ தலைமையிலான மக்கள் கட்சி மற்றும் சாண்டியாகோ அபாஸ்கல் தலைமையிலான வாக்ஸ் கட்சி உள்ளிட்ட வலதுசாரிக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வீட்டு வாடகை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் ஆளுங்கட்சியினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீழவையில் 176 இடங்களைப் பெறும் கட்சி அல்லது கூட்டணியால் ஆட்சியமைக்க முடியும். வாக்குப்பதிவு முடிந்ததும் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments