Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்வரலாறு படைத்த எம்புரான் படம் 30 நாட்களில் 325 கோடி ரூபாய் வசூல்

வரலாறு படைத்த எம்புரான் படம் 30 நாட்களில் 325 கோடி ரூபாய் வசூல்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்’. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்’ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. ‘எம்புரான்’ திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதன்மூலம் மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது.

இதற்கிடையே எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் படத்தில் சில காட்சிகளும் நீக்கப்பட்டன. படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தது. திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 30 நாட்கள் கடந்த நிலையில் திரைப்படம் உலகளவில் 325 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது மலையாள சினிமாவின் மிகப் பெரிய வெற்றியாகும். வெற்றியை விட எம்புரான் திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு வரலாற்றை படைத்துள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments