Monday, July 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ரயிலில் செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் தவறி விழுந்து படுகாயம்

ரயிலில் செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் தவறி விழுந்து படுகாயம்

பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் வைத்து செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி இன்று (19) காலை பயணித்துக் கொண்டிருந்த ரயிலில், அம்பேவெல பகுதியில் வைத்து செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments