Monday, July 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் - ஒருவர் பலி!

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் – ஒருவர் பலி!

குருநாகல் மாவட்டம், நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற  விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகமாகப் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments