Monday, July 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும்! - ஐ.ம.ச

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும்! – ஐ.ம.ச

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்தப் பிரேரணையில் கையெழுத்திட்டனர். நீதி அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதால், இந்தப் பிரேரணையைச் சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.” – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments