Friday, October 9, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மீண்டும் ட்ரெண்டிங்கில் த்ரிஷா

மீண்டும் ட்ரெண்டிங்கில் த்ரிஷா

தென்னிந்தியத் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் திரிஷா.

தற்போதும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகை ராதிகாவுடன் இருக்கும் நிழற்படம் ஒன்றைத் திரிஷா அண்மையில் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த நிழற்படத்தில், தான் அணிந்திருந்த செயின் பகுதியை இதய வடிவிலான இமோஜி மூலம் அவர் மறைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, செயினை மறைத்ததற்கான காரணம் என்ன, அந்தப் பகுதியில் என்ன இருந்தது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

எனினும், நிழற்படத்தில் செயின் பகுதியை மறைத்ததற்கான காரணம் குறித்து திரிஷா இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் வெளியிடவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments