Saturday, November 28, 2026
spot_img
Homeகனடா செய்திகள்இலண்டனில் உலகின் மிகப்பெரிய நகர அருங்காட்சியகம் பார்வைக்காகத் திறப்பு

இலண்டனில் உலகின் மிகப்பெரிய நகர அருங்காட்சியகம் பார்வைக்காகத் திறப்பு

உலகின் மிகப்பெரிய நகர அருங்காட்சியகமாகக் கருதப்படும் புதிய இலண்டன் அருங்காட்சியகம், இந்த வார இறுதியில் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக 10 ஆண்டுகளில் 570 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (437 மில்லியன் பவுண்டுகள்) செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலண்டனில் உலகின் மிகப்பெரிய நகர அருங்காட்சியகம் பார்வைக்காகத் திறப்பு | World S Largest City Museum Opens

இலண்டனின் ஸ்மித்ஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள பழைய இறைச்சிச் சந்தையைப் புனரமைத்து இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

1883ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தச் சந்தை, 1990களில் மூடப்பட்டது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், இந்தக் கட்டடம் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அணிந்த கறுப்பு நிறத் துக்க ஆடை, தூக்கிலிடப்பட்டபோது முதலாம் சார்லஸ் மன்னர் அணிந்திருந்த ஆடை மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் தனது இலக்கியப் படைப்புகளை எழுதப் பயன்படுத்தியதாக நம்பப்படும் தோல் இருக்கை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பாரம்பரிய அருங்காட்சியகக் கட்டமைப்பைக் கடந்து, உணவகங்கள், குறிப்பிட்ட நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும் காபி நிலையங்கள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கும் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட செலவை விட குறைந்தது 100 மில்லியன் பவுண்டுகள் மேலதிகமாக இந்தத் திட்டத்திற்குச் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலண்டன் நகரின் வரலாறு, சமூக மற்றும் கலாசாரப் பாரம்பரியங்களை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்த அருங்காட்சியகத்தின் பிரதான நோக்கமாகும்.

தற்காலிகக் கண்காட்சிக் கூடங்கள் மற்றும் கல்வி நிலையம் உள்ளடங்கிய அருங்காட்சியகத்தின் மற்றுமொரு பகுதி 2028ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments