நாட்டின் பல பகுதிகளுக்கு கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை மையத்தால் இன்று (1) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சபரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக அப்பகுதிக்குட்பட்ட பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் தங்குமாறும், மரங்களின் கீழ் தங்குவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


