யாழ்ப்பாணம், மயிலிட்டி மக்கள் தமது இராணுவ வசமுள்ள பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 23ஆவது வாரத்தை எட்டியுள்ளது.
உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிப்பதாக அரச தரப்பினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை நடைமுறை ரீதியான தீர்வு வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தமது காணி பிரச்சினைக்கு நேரடியாக தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுக்க வேண்டும் என மயிலிட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


