Sunday, November 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மயிலிட்டியில் வெடித்த போராட்டம்

மயிலிட்டியில் வெடித்த போராட்டம்

யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மயிலிட்டியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக நேற்று (13) வெள்ளிக்கிழமை 30ஆவது வாரமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது

தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாமையால் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், நேற்று 30ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments