Sunday, November 15, 2026
spot_img
Homeகனடா செய்திகள்சிறுவர்களை லாக்கரில் அடைத்த விவகாரம் – அமைச்சரின் கடும் கண்டனம்!

சிறுவர்களை லாக்கரில் அடைத்த விவகாரம் – அமைச்சரின் கடும் கண்டனம்!

சிறார் பள்ளி ஒன்றில், பள்ளி ஊழியர்கள் சிறு பிள்ளைகளை லாக்கரில் அடைத்ததாகக் கூறப்படும் விவகாரம் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றின் ஊழியர்கள், சிறுபிள்ளைகளை அமைதிப்படுத்துவதற்காக அவர்களை இரும்பு லாக்கரில் அடைத்ததாக கூறப்படும் விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

கியூபெக் மாகாணத்தில், Blainville என்னுமிடத்தில் அமைந்துள்ளது Envolée Primary School என்னும் பள்ளி. அந்தப் பள்ளியில் படிக்கும் ஐந்து முதல் ஏழு வயது வரையுள்ள சிறார்களை, அந்தப் பள்ளி ஊழியர்கள் இரும்பு லாக்கரில் அடைத்ததாக CHMP-FM என்னும் வானொலி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை The Centre de services scolaire des Mille-Îles (CSSMI) என்னும் கல்வி அமைப்பும் உறுதி செய்துள்ளது.

அத்துடன், பிள்ளைகள் அடைக்கப்பட்டதாக கூறப்படும் லாக்கரின் புகைப்படங்களும் வெளியாக, பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

உடனடியாக பொலிசார் அந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கிய நிலையில், அந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியை உட்பட நான்கு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக CSSMI தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கியூபெக் கல்வி அமைச்சரான ஜோயல் (Joël Arseneau ), பள்ளிகளில் இப்படிப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments