Sunday, November 15, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடா வரவு-செலவுத் திட்டத்தில் பூர்வகுடி பெண்கள் புறக்கணிப்பு

கனடா வரவு-செலவுத் திட்டத்தில் பூர்வகுடி பெண்கள் புறக்கணிப்பு

மத்திய அரசாங்கத்தின் புதிய வரவு-செலவுத்திட்டத்தில், பூர்வகுடி பெண்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் பூர்வகுடி பெண் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கம் தாக்கல் செய்துள்ள 500 பக்கங்களுக்கும் அதிகமான புதிய வரவு-செலவுத்திட்ட ஆவணத்தில், தங்களது உண்மையான தேவைகளும் எதார்த்த நிலைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என, அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கனடா பூர்வகுடி பெண்களுக்கான சங்கத்தின் (NWAC) தலைவர் ஜோசி நெபினாக் (Josie Nepinak) தலைமையில், ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, “பூர்வகுடி பெண்களின் பாதுகாப்பையும் அவர்களது துயர்துடைப்பு நடவடிக்கைகளையும் ஒரு தேசிய முன்னுரிமையாக மாற்றுவதற்கான பொன்னான வாய்ப்பை இந்த வரவு-செலவுத்திட்டம் நழுவவிட்டுள்ளது” என்று ஜோசி நெபினாக் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் கனடா கியூபெக் பூர்வகுடி பெண்கள் சங்கத்தின் தலைவர் மார்ஜொலைன் எட்டியென், ஒன்ராறியோ பூர்வகுடி பெண்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோரா மெக்வயர்–சிரெட் மற்றும் கான்கிரீட் அமைப்புத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பூர்வகுடி நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளுக்காக அடுத்த 10 ஆண்டுகளில் 50 பில்லியன் டொலர்களை வழங்குவதாக மார்க் கார்னி அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும், இன்சுயிட் மற்றும் மெட்டிஸ் (Métis) பூர்வகுடி சமூகங்களின் கோரிக்கைகள் வரவு-செலவுத்திட்டத்தில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகின்றமை குறிப்பிடத் தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments