Monday, September 28, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பாலஸ்தீனக் கைதியைக் கொல்லுமாறு மிரட்டல் - ஹமாஸ் கடும் கண்டனம்

பாலஸ்தீனக் கைதியைக் கொல்லுமாறு மிரட்டல் – ஹமாஸ் கடும் கண்டனம்

பாலஸ்தீனக் கைதியான ஹசன் சலாமேவைக் (Hassan Salameh) கொன்றுவிடுவதாக மிரட்டும் காணொளியை வெளியிட்ட இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விரை ஹமாஸ் அமைப்பு கண்டித்துள்ளது.

இச்செயல் அனைத்துலகச் சட்டங்களின் அப்பட்டமான மீறல் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தக் காணொளி அவரது உறுதியையோ அல்லது எங்கள் மற்ற கைதிகளின் உறுதியையோ பலவீனப்படுத்தாது என்றும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது.

இதேவேளை, ஆக்கிரமிப்பாளர்களின் சிறைகளிலிருந்து எங்கள் கைதிகளை விடுவிக்க, அனைத்து நிலைகளிலும் மற்றும் அனைத்து வழிகளிலும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இனியும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று ஹமாஸ் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

அவர்கள் சுதந்திரம் அடையும் வரை இந்த உறுதிமொழியில் நாங்கள் உறுதியாக இருப்போம். பாசிச அமைப்பின் தலைவர்களான பென்-க்விர் மற்றும் அவரைப் போன்றவர்களின் கதி, வரலாற்றில் இடம்பெற்ற மற்ற போர்க்குற்றவாளிகளின் கதியைப் போலவே அமையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments