Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87. இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார். எம்.ஜி.ஆர். உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். 50 ஆண்டுகால திரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் ஒன்ஸ்மோர், சூர்யாவுடன் ஆதவன் படங்களில் சரோஜா தேவி நடித்திருந்தார். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளில் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். இவரது நடிப்பிற்காக பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றார். 2008ல் வாழ்நாள் சாதனையாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதைப் பெற்றிருந்தார். சரோஜாதேவியின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த சரோஜாதேவிக்கு திரையுலகினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments