Sunday, November 1, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ஜெயிலர் 2’ படத்திலிருந்து சந்தானம் நீக்கப்பட்ட காரணம் – படக்குழு விளக்கம்!

ஜெயிலர் 2’ படத்திலிருந்து சந்தானம் நீக்கப்பட்ட காரணம் – படக்குழு விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, ஹ்ரித்திக் ரோஷன், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த நிலையில், நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் காட்சிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டது குறித்து பல விவாதங்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், இது குறித்துப் படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மிதுன் சக்கரவர்த்தியின் பிறந்தநாள் விழாவில் ரஜினிகாந்த் மாஸாக நடந்து வரும் காட்சியில் சந்தானம் இடம்பெற்றிருந்தாராம்.

இப்படத்தில் சந்தானம் ஒரு ஈவென்ட் மேனேஜர் போன்ற ரோலில் நடித்து, ‘பிந்தாஸ்’ பாடலை ஏற்பாடு செய்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

ஆனால், படத்தின் நீளம் மற்றும் கதையின் ஓட்டத்திற்கு இந்தக் காட்சிகள் தேவையில்லை என்று கருதிய இயக்குநர் நெல்சன், படத்தொகுப்பின் போது அவற்றை முழுமையாக நீக்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் இறுதி வடிவத்திற்காக சில காட்சிகளை நீக்குவது இயக்குநரின் முடிவு என்றும், இதனால் படத்தின் தரத்திற்கு எந்தவித குறையும் ஏற்படவில்லை என்றும் படக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பின் போது சந்தானம் ரஜினிகாந்துடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments