Friday, September 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போதைய மழையுடனான காலநிலையை கருத்தில் கொண்டு, பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது.

இதன்படி, இன்று (25) மாலை 4 மணி முதல் நாளை (26) மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை – நிலை 3:

காலி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அம்பர் எச்சரிக்கை – நிலை 2:

காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை – நிலை 1:

கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கேகாலை, கண்டி, குருநாகல், களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மழை தொடரும் பட்சத்தில் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments