Monday, July 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோற்கடிக்கப்படும் - தேவானந்த சுரவீர

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோற்கடிக்கப்படும் – தேவானந்த சுரவீர

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுக்கின்றன.

இது முற்றிலும் அர்த்தமற்ற ஒரு நடவடிக்கையாகும். இதற்கு முன்னரும் எதிர்க்கட்சிகள் இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வந்தபோதும், விவாதங்களின் போது அவர்களால் தர்க்க ரீதியான கருத்துகளை முன்வைக்க முடியவில்லை. அந்த வரிசையில், இந்தப் பிரேரணையும் தோல்வியிலேயே முடியும். – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments