ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பொது கரிசனையுள்ள விடயங்களில் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை (13) கொழும்பில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளன.


