கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரவீன் எஸ். விஜய் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராகவும், மிஷ்கின் அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர்.
பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே ஜூலை 24ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியீடு தாமதமான நிலையில், தற்போது புதிய வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.


