Tuesday, June 9, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த பவன் கல்யாண்

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த பவன் கல்யாண்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் 24 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையில் தொடர் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள, ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தமிழக மீனவர்களுக்கு ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

“வங்கக்கடலில் 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் 24 பேர் தாக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிக்கிறது. இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கையால் காயமடைந்த நாகை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments