Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வகைகள் இந்தியாவிலும் கண்டுபிடிப்பு

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வகைகள் இந்தியாவிலும் கண்டுபிடிப்பு

உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று மீண்டும் பல நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக 2 வகை கொரோனா மாறுபாடு வைரஸ்களை உலக சுகாதார நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.அந்தவகையில் என்பி.1.8.1 மற்றும் எல்எப்.7 ஆகிய 2 கொரோனா திரிபு வைரஸ்களால் இந்த பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது.

இந்த 2 வகை கொரோனாவும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதன்படி என்பி.1.8.1. வைரஸ் கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கும், எல்எப்.7 வகை வைரஸ் குஜராத்தில் 4 பேருக்கும் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மாறுபாடுகள் கண்காணிப்பின் கீழ்தான் இருப்பதாகவும், அவை அபாயமானவையாக இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments