Wednesday, September 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சவூதி மரண தண்டனை: அனோஜன் மீட்புக்காகச் சிறப்புப் பிரார்த்தனை

சவூதி மரண தண்டனை: அனோஜன் மீட்புக்காகச் சிறப்புப் பிரார்த்தனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து, அவரைப் பாதுகாப்பாக மீட்டுவர வலியுறுத்தி, காரைதீவில் சிறப்பு இறைப் பிரார்த்தனை நிகழ்வு நேற்று (22) மாலை நடைபெற்றது.

“எம் மண்ணின் மைந்தனை மீட்டிடக் கைகோர்ப்போம் வாரீர்” எனும் உணர்வுப்பூர்வமான அழைப்பின் கீழ், காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் 2001 O/L மற்றும் 2004 A/L (JALU) கல்விப் பிரிவு நண்பர்கள் குழுவினால் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இப்பிரார்த்தனை நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு, அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி அவரை உயிருடன் நாட்டிற்கு மீட்டுவர நடவடிக்கை எடுக்குமாறு சவூதி அரசுக்கும் இலங்கை அரசுக்கும் கோரிக்கை விடுத்து, தீபமேந்தி இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments